Wednesday, July 6, 2016

4 மாத மின்கட்டணம் ரூ.77 லட்சம்

4 மாத மின்கட்டணம் ரூ.77 லட்சம்: நுகர்வோருக்கு ‘ஷாக்’ கொடுத்த ஹரியாணா மின்வாரியம்


ஹரியாணா மாநிலத்தில் வீட்டு மின் நுகர்வு கட்டணமாக ரூ.77 லட்சம் செலுத்தும்படி மின்வாரியம் அனுப்பி வைத்த ரசீதால் நுகர்வோர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

குர்கானில் உள்ள செக்டார் 17 பகுதியில் வசித்து வருபவர் அகிலேஷ் சர்மா. இவர் 2 மாதங்களுக்கு ஒரு முறை வீட்டு உபயோக மின்சாரத்துக்காக ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை மின் கட்டணம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தென் ஹரியாணா மின்வாரியம் இம்முறை நான்கு மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் செலுத்தும்படி அகிலேஷ் சர்மாவுக்கு ரசீது அனுப்பி வைத்தது. இதற்காக ரூ.77 லட்சம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பதற்றம் அடைந்த அகிலேஷ் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை அணுகி முறையிட்டார்.

இதைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த தவறு நிகழ்ந்ததாக தெரியவந்தது. அதன் பின்னரே அகிலேஷ் சர்மா நிம்மதியடைந்தார்.

எனினும் அந்த அதிர்ச்சியின் தாக்கத்தில் இருந்த அகிலேஷ் சர்மா, ‘‘தென் ஹரியாணா மின்வாரியம் வழக்கமாக 2 மாதங்களுக்கு ஒருமுறை தான் மின் கட்டணம் வசூலிக்கும். ஆனால் இந்த முறை 4 மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் வசூலித்து வருகிறது. இதனால் பெருந்தொகை கட்ட வேண்டியிருப்பதால் நுகர்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ள னர். தவிர கெடு காலமும் 15 நாட் களுக்கு பதிலாக 6 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. போதாக் குறைக்கு லட்சக்கணக்கில் ரசீது வேறு போடுகிறார்கள். 4 மாத மின்கட்டணத்தை ஒரே மாதத்தில் நுகர்வோரால் எப்படி புரட்ட முடி யும்?’’ என்கிறார் வேதனையுடன்.

ஹரியாணாவில் இப்படி லட்சக்கணக்கில் மின் கட்டணம் செலுத்தும்படி ரசீது அனுப்புவது புதிதல்ல என்றும் ஏற்கெனவே பல முறை இவ்வாறு நடந்திருப்பதாகவும் நுகர்வோர்கள் மனம் நொந்து கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024