அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ஜூலை 1 ஆம் தேதி முதல் உயர்த்தி அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ஜூலை 1 ஆம் தேதி முதல் உயர்த்தி அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
யார் யாருக்கு பொருந்தும்? மத்திய அரசைத் தொடர்ந்து, தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி ஜூலை 1 ஆம் தேதி முதல் 7 சதவீதம் உயர்த்தி அளிக்கப்படும். இதன்படி அகவிலைப்படி 125 சதவீதத்தில் இருந்து 132 சதவீதமாக உயரும்.
அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி-சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.
எவ்வளவு கிடைக்கும்? அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.427 முதல் ரூ.5,390 வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள்-குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.214 முதல் ரூ.2,695 வரையில் ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும். ஜூலை 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலத்துக்கான அகவிலைப்படி உயர்வு அவரவர் வங்கிக் கணக்கில் மொத்தமாகச் செலுத்தப்படும். இந்த மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு மாத ஊதியத்துடன் சேர்த்து அளிக்கப்படும்.
18 லட்சம் பேர் பயன்: அகவிலைப்படி உயர்வால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர். அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,833.33 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
Dailyhunt
No comments:
Post a Comment