நெட் ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார்.. சவால் கொடுக்குமா அமேசான் ப்ரைம் வீடியோ!
#PlusMinus
ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான அமேசான், அமேசான் ப்ரைம் தனது புதிய சேவையை துவங்கியுள்ளது. இந்த சேவை மூலம் திரைப்படங்களை ஹச்.டி தொழில்நுட்பத்தில் ஆன்லைனிலும், ஆஃப் லைனிலும் பார்க்க முடியும் என்கிறது அமேசான். அமேசான் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தை கடந்த புதன்கிழமை துவங்கியது. இதற்கு இந்தியாவில் மிகுந்த வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியாவில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் நெட் ப்ளிக்ஸ் ஹாட் ஸ்டார் இணையதளங்கள் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை அளித்து வருகின்றன. ஹாட் ஸ்டார் மற்றும் நெட் ப்ளிக்ஸின் சேவைக்கட்டணம் மாதம் 99 ரூபாயிலிருந்து துவங்குகிறது. வருடத்திற்கு குறைந்தபட்சம் 1200 ரூபாயிலிருந்து சேவைக்கடணம் துவங்குகின்றன. ஆனால் அமேசான் ப்ரை அதிரடியாக வருடத்திற்கு 499 ரூபாய் என்ற ஆஃபரில் வழங்குகிறது. அதுமட்டுமில்லாது முதல் மாதம் இலவச சேவையை வழங்கியுள்ளது. இதற்கு தேவை ஒருவருக்கு அமேசான் தளத்தில் கணக்கு இருந்தாலே போதுமானது,
இந்தியாவில் என்ன சிறப்பு:
அமேசானின் இந்த புதிய சேவையில் இந்தியாவில் பாலிவுட், அமெரிக்க சீரியல்கள், மண்டல மொழி படங்கள் மற்றும் கேம்கள் என சேவையை வழங்கியுள்ளது. 142 நாடுகளில் அமேசான் ப்ரைம் சேவை லைவ்வில் உள்ளது. இதில் இந்தியாவில் சிறப்பு என்னவென்றால் இந்தியாவில் ஆபாசமான காட்சிகள் சென்சார் செய்யப்பட்டு மங்களாக காட்டப்படும். இதனை எந்த வித கோரிக்கையும் இன்றி தானாகவே முன்வந்து அமேசான் செய்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களை நாங்கள் மதிக்கிறோம் அதனால் தான் சென்சார் செய்து வெளியிடுகிறோம் என்கிறது அமேசான். மேலும் குழந்தைகளுக்கான டிவி ஷோக்களையும் வழங்குகிறது. இது தவிர அமேசானின் சொந்த வீடியோக்களையும் வழங்குகிறது.
எதில் பார்க்க முடியும்?
இந்த சேவையை ஆண்ட்ராய்டு , ஐ-ஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப்களில் பெற முடியும். இந்த தளங்களில் லாக் இன் செய்து இந்த சேவையை பெறலாம். க்ரோம்காஸ்டில் இந்த சேவையை பெற முடியவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் கூகுள் க்ரோம்காஸ்ட் செட்டப்பை க்ரோம்காஸ்டில் இன்ஸ்டால் செய்து அதன் மூலம் இந்த சேவையை பெற முடியும்.
விலையில் என்ன மாற்றம்:
அமேசான் ப்ரைம் வீடியோ தற்போது முதற்கட்டமாக வருடத்திற்கு 499 ரூபாய் என்ற அளவிலும், பின்பு வருடத்திற்கு 999 ரூபாயாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் நெட்ப்ளிக்ஸ் பேசிக், ஸ்டாண்டர்டு,ப்ரீமியம் சேவைகளை முறையே ரூ 500, ரூ 650, ரூ 800 ஆகிய விலைகளில் வழங்குகிறது ஆனால் நெட் ப்ளிக்ஸின் கட்டணங்கள் அனைத்தும் மாதத்துக்கான கட்டணங்கள். ப்ரைமின் கட்டணம் வருடத்திற்கான கட்டணமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழில் என்ன இருக்கிறது?
தமிழின் சமீபத்திய ஹிட்களான கபாலி மற்றும் தெறி தான் அமேசான் ப்ரைமில் தமிழ் ரசிகள்களுக்கான ஸ்பெஷல் வருகைகள். இது தவிர மேலும் பல படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மக்களை கவரும் விதத்தில் இந்த படங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மைனஸ் என்ன?
அதிரடி விலை சலுகையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையில் விலை மட்டுமே கவர்ச்சிகரமானதாக உள்ளது சேவைகளில் வழங்கப்படும் வீடியோக்களின் கலெக்ஷன் சரிவர திருப்திகரமானதாக இல்லை. இணைய வேகம் குறைவாக இருந்தால் போதும் என கூறியுள்ளது ஆனால் இது 4ஜி சேவைகளிலும் கூட நேரம் எடுத்து கொள்வது போன்ற ஆரம்ப சிக்கல்கள் உள்ளன. இவற்றை விரைவில் சரி செய்தால் ஹாட் ஸ்டார், நெட் ப்ளிக்ஸுக்கு டஃப் கொடுக்கலாம்.
அமேசானில் பொருள் வாங்கி கொண்டிருந்த அனைவரும் இந்த சேவையின் இலவச சோதனைக்கு தயார் ஆகி வருகின்றனர். ஒரு மாதம் கட்டாயம் இலவசம் என்பதால் வேகமாக இந்த சேவை பரவி வருகிறது. இந்தியாவில் ப்ரைம் டெலிவரியில் ஏற்கெனவே 7 லசம் வாடிக்கையாளர்கள் இருப்பது இதன் ப்ளஸ். இந்தியா போன்ற நாடுகளில் இப்படிப்பட்ட சேவைகளின் வருகை திரையரங்குகளுக்கு சற்று ஆபத்து தான் என்றால் என்டர்டெயிண்மன்ட் துறையின் வளர்ச்சியாக தான் இதனை அணுக வேண்டும். ப்ரைம் கட்டாயம் இந்த துறையில் பெரிய சாவலை அளிக்கும் என்கிறனர் வாடிக்கையாளர்கள். நிச்சயம் மற்ற ஸ்ட்ரீமிங் நிறுவனங்களும் உத்திகளை மாற்றியமைக்கும் என நம்பலாம்.
ச.ஸ்ரீராம்
No comments:
Post a Comment