வங்கிக் கணக்கை இயக்க பான் எண் கட்டாயம்: ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடு
புது தில்லி: வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சத்துக்கும் மேல் வைத்திருப்பவர்களுக்கும், நவம்பர் 8ம் தேதிக்குப் பிறகு வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கும் புதிய கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதாவது, வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சத்துக்கும் மேல் வைத்திருப்பவர்கள் பான் எண்ணை இணைக்கும் வரை அல்லது படிவம் 60ஐ அளிக்கும் வரை தங்களது வங்கிக் கணக்கை இயக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதே போல, 2016 நவம்பர் 8ம் தேதிக்கு மேல் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்திருக்கும்பட்சத்தில் அவர்களும் பான் எண் இணைக்காமல் இருந்தால் கணக்கை இயக்க முடியாது என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், சாதாரண ஏழை, எளிய மக்கள், கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிக்கு உதவி இருந்தால், அவர்கள் தங்களது வங்கிக் கணக்கை இயக்க முடியாத நிலை ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.
இதே போல், ஏழை மக்களுக்கான ஜன் தன் வங்கிக் கணக்கில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை டெபாசிட் செய்யப்பட்டதால், ஒரு மாதத்துக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாமல் கட்டுப்பாடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment