ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு காஸ் மானியம் ரத்தாகிறது
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு சமையல் காஸ் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வருமான வரித்துறை, பெட்ரோலிய அமைச்சகத்துடன் விரைவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது. இதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் பெயர், பான் எண், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கும். இதன்மூலம், ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு தானாகவே சமையல் காஸ் மானியம் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது.
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் தாமாக முன்வந்து காஸ் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் வெகுசிலரே தாமாக முன்வந்து விட்டுக்கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment