Sunday, June 4, 2017

சினிமா செய்திகள்

பதிவு செய்த நாள்03ஜூன்2017 22:32




60 வயது இயக்குனர் 30 வயது நடிகை டும்டும்...

'நாளைய மனிதன்', 'அதிசய மனிதன்', 'கடவுள்', 'புரட்சிக்காரன்', 'காதல் அரங்கம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் வேலு பிரபாகரன். இவர், சென்னை நுங்கம்பாக்கம் லீமேஜிக் லேட்டீரின் பிரிவியூ தியேட்டரில் நேற்று (ஜூன் 3-ம் தேதி) தன்னை விட சுமார் 30 வயது குறைந்த நடிகை ஷெர்லி தாஸை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். வேலுபிரபாகரன் இயக்கத்தில் 'ஒரு இயக்குனரின் காதல் டைரி' படத்தின், பத்திரிகையாளர் காட்சிக்கு வந்த இருவரும் இப்படியொரு திருமணத்தை நடத்தினர். ஷெர்லி, வேலுபிரபாகரனின் 'காதல் அரங்கம்' படத்தில் நடித்தவர்.
'வேலு பிரபாகரனின் உண்மை பேசும் தன்மை மற்றும் நேர்மையால் ஈர்க்கப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்கிறேன். சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொள்ள போகிறேன்...' என ஷெர்லியும், 'திருமணத்திற்கு வயது முக்கியமல்ல' என வேலுபிரபாகரனும் கூறியுள்ளனர்.
டிஜிட்டிலில் வருகிறான் 'ஆளவந்தான்'

கடந்த 2001ம் ஆண்டு வெளிவந்த படம் 'ஆளவந்தான்'. கமல்ஹாசன் நடிப்பில் அப்போதே 20 கோடி ரூபாய் செலவில் உருவான படம். தயாரிப்பாளர் தாணு தயாரித்தார். கமலுடன், ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், கிட்டி இவர்களுடன் தெலுங்கு மற்றும் இந்தி நடிகர், நடிகைகளும் நடித்திருந்தார்கள்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கமல் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படம் அப்போது பெரிய வெற்றி பெறவில்லை. அப்படத்தை மீண்டும் வெளியிட தயாரிப்பாளர் தாணு முடிவு செய்திருக்கிறார். படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றி 500 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். 'ஆளவந்தான்' படத்தின் நீளம் கருதி அப்போது பெரிய பட்ஜெட்டில் உருவான சில சண்டை காட்சிகள் வெட்டப்பட்டன. அந்த காட்சிகளையும் இணைத்து படத்தை வெளியிடுகிறார்.

'காலா'வில் அம்பேத்கராக மம்முட்டி?
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'காலா' படம் பற்றி தினம் ஒரு தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. இந்தப்படத்தில் மலையாள 'மெகா ஸ்டார்' மம்முட்டி, அம்பேத்கராக நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தவர்தான் மம்முட்டி. அதனாலேயே மம்முட்டியை இந்தப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. 'காலா' படத்தை தயாரிக்கும் தனுஷ், மம்முட்டியிடம் இதுதொடர்பாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
மம்முட்டி இப்படத்தில் நடித்தால், 'தளபதி' படத்துக்கு பின் 26 வருடங்கள் கழித்து ரஜினியும் மம்முட்டியும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.-----------

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024