Sunday, June 4, 2017

ஆங்கில படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்04ஜூன்2017 02:01

செங்கல்பட்டு;காஞ்சிபுரம் திரையரங்குகளில், 'பே வாட்ச்' ஆங்கில படம் பார்க்க, சிறுவர்களை அனுமதிக்க கூடாது என, திரையரங்கு உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில், 2ம் தேதி, 'பே வாட்ச்' என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியிடப்பட்டது. 

இந்த படத்தை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர்,'பே வாட்ச்' ஆங்கில படத்தை பார்க்க, 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்க கூடாது என, உயர் நீதிமன்றத்தில், 'ரிட்' மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், திரையரங்குகளில் சிறுவர்களைஅனுமதிக்க கூடாது என, உத்தரவிட்டது.

இதையடுத்து, சென்னை வடக்கு மண்டல காவல்துறை தலைவர், திரையரங்கு உரிமையாளர்களை அழைத்து, ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து, செங்கல்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில், செங்கல்பட்டு, படாளம் ஆகிய இடங்களில் இயங்கி வரும், திரையரங்குகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம், நேற்று, நடைபெற்றது.
அதில், தங்கள் திரையரங்கில், 'பே வாட்ச்' என்ற ஆங்கில படம் திரையிடும் பட்சத்தில், 18 வயதிற்கு உட்பட்டவர்களை அனுமதிக்க கூடாது. திரை அரங்கு முகப்பு வாயிலில், 18 வயதிற்குட்பட்டோர், இந்த படத்தை பார்க்க அனுமதி கிடையாது என, விளம்பர பதாகை அமைக்கப்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.இதே போன்று, வண்டலுார் காவல் துணை கண்காணிப்பாளர் முகிலன் தலைமையில், திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அவர்களுக்கும், இதே அறிவுரை வழங்கப்பட்டது.மாவட்ட எஸ்.பி., அறிவுறுத்தல்காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட, அனைத்து திரையரங்குகளிலும் இந்த படம் குறித்தும், இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், திரையரங்குகளின், வெளியே நோட்டீஸ் ஒட்ட மாவட்ட எஸ்.பி., சந்தோஷ் ஹதிமனி உத்தரவிட்டுள்ளார். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு டிக்கெட் வழங்ககூடாது என்றும், திரையரங்க மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024