Monday, June 5, 2017

10 பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தியது ஹீரோ!

ராகுல் சிவகுரு




இந்தியாவில் அதிக டூ-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனமான ஹீரோ, 10 பைக்குகளின் (கரிஷ்மா R, ஹங்க், கிளாமர் Fi, இக்னீட்டர், பேஷன் X ப்ரோ, பேஷன் ப்ரோ TR, எக்ஸ்ட்ரீம், HF டான், ஸ்ப்ளெண்டர் ஐ ஸ்மார்ட், ஸ்ப்ளெண்டர் ப்ரோ கிளாசிக்)தயாரிப்பை நிறுத்திவிட்டது. BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப தனது டாப் செல்லிங் மாடல்களை மேம்படுத்திவிட்ட ஹீரோ, மேலே குறிப்பிட்டவற்றை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டது. இவற்றின் குறைவான விற்பனை எண்ணிக்கையே இதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. எனவே இதற்கு எல்லாம் மாற்றாக, 6 முற்றிலும் புதிய மாடல்களை விரைவில் களமிறக்க உள்ளது ஹீரோ.



ஜெய்ப்பூரில் இந்நிறுவனத்துக்குச் சொந்தமாக இருக்கும் Centre for Innovation and Technology (CIT)-யில், 2500 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய மாடல்களின் வடிவமைப்பு நடைபெற உள்ளன. தற்போதைக்கு எக்ஸ்ட்ரீம் மற்றும் ஹங்க் ஆகியவற்றுக்கு மாற்றாக, அச்சீவர் மற்றும் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் இருக்கின்றன. ஸ்ப்ளெண்டர் ஐ ஸ்மார்ட் 100-க்குப் பதிலாக, முற்றிலும் புதிய 110சிசி ஐ ஸ்மார்ட் இருக்கிறது. கரிஷ்மாவுக்கு மாற்றாக, HX250R அல்லது எக்ஸ்ட்ரீம் 200S பைக் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய கிளாமருக்குப் பதிலாக, முற்றிலும் புதிய கிளாமர் SV அறிமுகமாகிவிட்டது.





இக்னீட்டருக்கு மாற்றாக சூப்பர் ஸ்ப்ளேண்டர் இருக்கிறது. HF டானுக்குப் பதிலாக, HF டீலக்ஸ் அந்த இடத்தைப் பிடித்துவிட்டது. பேஷன் ப்ரோ பைக்குகளுக்குப் பதிலாக, பேஷன் ப்ரோ i3s மாடல் பொசிஷன் செய்யப்படுகிறது. ஆக, தயாரிப்பிலிருந்து நிறுத்தப்பட்ட பைக்குகளால், ஹீரோவின் கம்யூட்டர் பைக்குகளின் விற்பனையில் எவ்வித பாதிப்பும் இருக்கப்போவதில்லை. ஆனால், பெர்ஃபாமென்ஸ் செக்மென்ட்டில் வீக்காக இருக்கும் ஹீரோ, இப்போது இன்னும் பலவீனமாகி இருக்கிறது. ஸ்கூட்டர் மாடல்களில் இதுபோன்ற எந்த குழப்பமும் இல்லாதது ஆறுதல்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024