Monday, June 5, 2017

'கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டியதில்லை': தம்பிதுரை அந்தர் பல்டி
இரா. குருபிரசா

ஜெயலலிதா மறைவும் அதன் பின் அ.தி.மு.க-வில் நடந்து வரும் அரசியல்கள் குறித்தும் அனைவரும் அறிந்த ஒன்றே. சசிகலா ஆதிக்கத்தால் ஓ.பி.எஸ் போர்கொடி எழுப்பினார். பின், சசிகலா சிறைக்கு சென்றார். இதையடுத்து எம்.எல்.ஏ-க்கள் சிலர் ஓ.பி.எஸ் பக்கம் தாவினர். ஆனாலும், மீதி உள்ள எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை வைத்து எடப்பாடி ஆட்சியைப் பிடித்தார். இதையடுத்து, தினகரன் ஆதிக்கம் ஆரம்பிக்கவே அவரும் கைது செய்யப்பட்டார்.




கைது செய்வதற்கு முன் கட்சியை விட்டு விலகுவேன் என்று கூறியவர், தற்போது மீண்டும் கட்சிப் பணியை தொடர்வேன் என்று கூறியுள்ளார். இது அ.தி.மு.க தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறியவர்கள் முக்கியமானவர் தம்பிதுரை. குறிப்பாக, மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் தனது லெட்டர் பேடிலேயே, "கட்சி மற்றும் ஆட்சிப் பணி ஒருவரிடம்தான் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

இந்நிலையில் தற்போது தினகரனின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை, "கட்சியும், ஆட்சியும் ஒரு சேர இருக்க வேண்டும் என்ற சொன்ன காலகட்டம் வேறு. தற்போதைய சூழல் வேறு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலக்கட்டத்தில் கட்சி, ஆட்சி ஒருவரிடம்தான் இருந்தது. இதனால், சசிகலாவையும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால், தற்போதைய நிலை வேறு. எடப்பாடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 5 ஆண்டுகள் முழுமையாக இந்த ஆட்சி நடக்கும். எங்களுக்குள் பிளவு ஏதும் இல்லை. எனவே கட்சியும், ஆட்சியும் ஒருவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024