Monday, June 5, 2017

லஞ்சத்தை திரும்ப பெற 1100க்கு போன் செய்யுங்க!

பதிவு செய்த நாள்05ஜூன்2017 00:13

அமராவதி: அரசு சேவைகள் பெறுவதற்கு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் இனி கவலைப்பட வேண்டாம். 1100 என்ற எண்ணுக்கு போன் செய்தால், கொடுத்த லஞ்சப் பணத்தை, அதிகாரிகள் திரும்ப கொண்டு வந்து தந்து விடுவர். இந்த புதிய சேவை ஆந்திராவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அரசு அமைந்துள்ளது. நாட்டில் அதிக அளவில் லஞ்சம் புழங்கும் மாநிலங்களில், கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் ஆந்திரா உள்ளது. இந்த களங்கத்தை துடைப்பதற்காக, முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.
'பீப்பிள் பர்ஸ்ட்' என்ற பெயரில், மக்கள் குறை தீர்க்கும் புதிய அமைப்பை மாநில அரசு உருவாக்கியுள்ளது. இது குறித்து, அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது:இந்த புதிய அமைப்பின் கீழ், 1100 என்ற தொலைபேசி எண்ணில் மக்கள் புகார் தெரிவிக்கலாம். அரசு சேவைக்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க நேர்ந்திருந்தால், இந்த எண்ணில் புகார் கொடுக்கலாம். உடனடியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், அதிகாரிகள் விசாரிப்பர். லஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்டு, அதை உடனடியாக, அந்த அதிகாரி திருப்பி கொடுத்தால், நடவடிக்கையில் இருந்து தப்பிப்பார்.

இந்த புதிய திட்டத்தின் கீழ், இதுவரை, 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள், தாங்கள் வாங்கிய லஞ்சத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட அதிகாரி, தான் லஞ்சம் வாங்கிய, 10 பேருக்கு பணத்தை கொடுத்துள்ளார். இதுவரை, திருப்பி தரப்பட்ட தொகையின் அளவு, 500 அல்லது 1,000 ரூபாயாக இருந்தாலும், அதிகாரிகள் இடையே ஒரு பயத்தை இந்த திட்டம் உருவாக்கியுள்ளது. புரோக்கர்களும் இதில் அடங்குவர். லஞ்சம் வாங்கியதை அதிகாரி மறுத்தால், அது தொடர்பாக, தனியாக விசாரணை நடத்தப்படும்.அதே நேரத்தில் ஒருவர் தவறாக புகார் கொடுத்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024