Monday, June 5, 2017

கால்நடை பல்கலை துணைவேந்தர் மீது புகார் : விசாரணைக்கு 7 பேர் கமிட்டி அமைப்பு

பதிவு செய்த நாள்04ஜூன்
2017
23:46

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலை துணைவேந்தர் மீதான, முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க, ஏழு பேர் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை, வேப்பேரியில் செயல்படும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலை துணைவேந்தர் திலகர் மீது, பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. முதல்வரின் தனிப்பிரிவு, கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர், செயலர் போன்றோருக்கும், சிலர் புகார்கள் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் அன்பழகன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், துறை ரீதியாக விசாரணை நடத்த, பல்கலையின் மேலாண் கமிட்டி முடிவெடுத்துள்ளது. இதற்காக, நாமக்கல் கால்நடை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் குணசீலன் தலைமையில், ஏழு பேர் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிட்டியினர், துணைவேந்தர் முதல் ஊழியர்கள் வரை, அனைவரையும் தனித்தனியே விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, பதிவாளர் மதியழகன் உத்தரவிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுகள் என்ன?

l சென்னை கால்நடை அறிவியல் கல்லுாரி மற்றும் விடுதி வளாகத்தில், சாலைகள் அமைப்பதற்கான பணிகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டியதால், டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது

l பல்கலை மேலாண்மை குழு
கூட்டத்தை, விதிகளின்படி உரியகாலத்தில் கூட்டவில்லை. 

ராசிரியர்களுக்கான, சி.ஏ.எஸ்., பதவி உயர்வில், விதிகள் மீறப்பட்டுள்ளன
l எஸ்டேட் அதிகாரி பணியில், செயற்பொறியாளர் ஒருவருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, முறைகேடாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது
l ஓசூர் கோழியின உற்பத்தி கல்லுாரியில், புதிய கட்டடங்கள் கட்டிய நிறுவனத்திற்கு, கூடுதலாக பல லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, தணிக்கையிலும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வேறு பல குற்றச்சாட்டுக்களும் கூறப்பட்டுள்ளன.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024