Tuesday, June 13, 2017

சென்னையில் விரைவில் எலக்ட்ரிக் பஸ் : பல்லவன் இல்லத்தில் சோதனை ஓட்டம்
பதிவு செய்த நாள்12ஜூன்2017 22:08

சென்னை: தமிழகத்தில், முதன் முறையாக, சென்னையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, எலக்ட்ரிக் பஸ்களை இயக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, சோதனை
ஓட்டம் நேற்று நடந்தது.

தமிழகத்தில் இதுவரை, டீசல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதன்முறையாக, சுற்றுச்சூழலை பாதிக்காத, பேட்டரியில் இயங்கும், எலக்ட்ரிக் பஸ்களை, சென்னையில் இயக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான சோதனை ஓட்டமும், பல்லவன் இல்ல பணிமனையில் நேற்று நடந்தது.

எலக்ட்ரிக் பஸ் சோதனை ஓட்டத்தை துவக்கி வைத்து, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது: சென்னையில், போக்குவரத்தை நவீனப்படுத்த வேண்டும்; பொதுமக்களுக்கு சுகமான பஸ் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பேட்டரி பஸ் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பஸ் நல்ல முறையில் இயங்குகிறது. சென்னை மாநகரில் இயக்க தேவையான வகையில், பஸ்சின் வடிவமைப்பை மாற்றித்தர, நிறுவனங்கள் முன் வந்துள்ளன. விரைவில், சென்னையில் இந்த பஸ்கள் இயக்கப்படும். அசோக் லேலண்ட் நிறுவனத்தை தொடர்ந்து, டாடா நிறுவனத்திடமும், இதுகுறித்து பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். சென்னையில், இந்த பஸ்சுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, பிற மாவட்டங்களுக்கும், விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாக, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்




சிறப்பம்சங்கள்

 பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் பஸ்சில், வழித்தடத்தை கண்காணிக்கும், ஜி.பி.எஸ்., வசதி, தானியங்கி கியர், தானியங்கி கதவு, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, கண்காணிப்பு கேமரா
போன்றவை இருக்கும்
 பஸ் இயங்க, 26 பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பேட்டரிகளை, மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், 150 கி.மீ., வரை இயக்கலாம்.

இதுகுறித்து, அசோக் லேலண்ட் நிறுவனத்தின், உதவி பொது மேலாளர், சுரேஷ் கூறியதாவது:
சென்னை மாநகரில் இயக்கும் வகையில், பெரிய பஸ்சாக வடிவமைக்கப்படும். பஸ்சில், இஞ்ஜினுக்கு பதில், மோட்டார் இருக்கும். டீசல் டேங்கிற்கு பதில், பேட்டரி இருக்கும். இதிலிருந்து, கழிவுகள் வெளியேறாது; புகை, ஒலி மாசு இருக்காது. இந்த பஸ் இயங்கும் துாரத்திற்கு, சாதாரண பஸ்களை இயக்கினால், 40 லிட்டர் டீசல் செலவாகும். பேட்டரி ரீசார்ஜ் செய்ய, அதில் பாதி செலவே ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

'நல்ல முயற்சி' : ''வளைகுடா போர் நடந்த காலத்தில், பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால், இந்தியா முழுக்க, பேட்டரி கார் வாங்க முயற்சி நடந்தது. சென்னையிலும், இரண்டு பஸ்கள் வாங்கப்பட்டு, பாரிமுனையில் இருந்து, தாம்பரம் வரை இயக்கப்பட்டன. உரிய வகையில், ரீசார்ஜ் செய்யாததால் பழுதடைந்தன. தற்போது, தொழில்நுட்பங்கள் முன்னேறி உள்ளதால், பஸ்களின் கூரை மீதே, சூரிய ஒளி தகடுகளை நிறுவி, பேட்டரியை ரீசார்ஜ் செய்யலாம்; இது, நல்ல முயற்சி.

நடராஜன், தொ.மு.ச.,

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024