Tuesday, June 13, 2017

தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை

பதிவு செய்த நாள்12ஜூன்2017 23:30




புதுக்கோட்டை: பாலியல் தொல்லையால், ஆசிரியை தற்கொலைக்கு காரணமான தலைமை ஆசிரியருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், தெற்குராயப்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர், புவனேஸ்வரி, 43. அதே பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றிய மதிவாணன், 50, புவனேஸ்வரிக்கு அடிக்கடி, மொபைல் போனிலும், பள்ளியில் நேரடியாகவும் பாலியல் தொல்லை கொடுத்து வந்தான். இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி, 2015 பிப்ரவரியில், தன் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியர் மதிவாணன் மீது வழக்கு பதிவு செய்தனர். புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணையில், நேற்று, நீதிபதி லியாகத் அலி தீர்ப்பளித்தார்.
ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்து, தற்கொலைக்கு காரணமான தலைமை ஆசிரியர் மதிவாணனுக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனையும், 52 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, மதிவாணனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024