Wednesday, June 14, 2017

'எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தை மத்திய அரசு முடிவு செய்யும்'

பதிவு செய்த நாள்13ஜூன்2017 22:21

சென்னை: ''எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை, மத்திய அரசு தான் முடிவு செய்யும்,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், பேச முடியாத, செவித்திறன் இழந்த, 200 குழந்தைகளுக்கு, காது நுண் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை நடந்தது. இவர்களுக்கு, செவித்திறன் செயல்பாட்டை, முதல்வர் பழனிசாமி, நேற்று துவங்கி வைத்தார்.
உள்நோயாளிகள் பிரிவை ஆய்வு செய்ததுடன், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தையும், அவர் பார்வையிட்டார்.

பின், முதல்வர் பழனிசாமி கூறுகையில், ''அனைத்து மாவட்டங்களுக்கும், அம்மா முழு உடல் பரிசோதனை மையம் விரிவுபடுத்தப்படும். சென்னையில், இதுவரை, 16 ஆயிரத்து, 700 பேர் பரிசோதனை செய்து, பயன் பெற்றுள்ளனர். ''எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, ஐந்து இடங்களை தமிழக அரசு தேர்ந்தெடுத்து, மத்திய அரசிடம் கொடுத்துள்ளது. அதில், எங்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்பதை, மத்திய அரசு முடிவு செய்யும்,'' என்றார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''தமிழகத்தில், 1.57 கோடி பேருக்கு, மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், சிறுவயதிலேயே வாய் பேச முடியாத, செவித்திறன் இழந்த குழந்தைகளுக்கு, காது நுண் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை, 2,856 குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர். ''இவர்களுக்கு, கருவி பொருத்துதல் மற்றும் ஓராண்டு பேச பயிற்சி அளித்தல் சிகிச்சை, 220.60 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...