Wednesday, June 14, 2017

புதிய ரூ.500 நோட்டு அறிமுகம்  புழக்கத்தில் உள்ளதும் செல்லும்
புதுடில்லி, :புதிய வரிசை உடைய, 500 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள, 500 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.



கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, 2016, நவ., 8ல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

வித்தியாசம் கிடையாது

இந்நிலையில், புதிய வரிசை கொண்ட, 500 ரூபாய்நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி, நேற்று அறிவித்தது.இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, வெளியிடப்பட்டுள்ள மஹாத்மா காந்தி வரிசையிலான, 500 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. இதில், நோட்டின் முன்பக்கத்தில் மேல் இடது மற்றும் கீழ் வலதுபக்கத்தில் உள்ள நோட்டின் வரிசை எண்களுக்கு இடையில், 'E' என்ற ஆங்கில எழுத்து இடம்பெற்றுள்ளது.தற்போது, 'A' என்ற ஆங்கில எழுத்துடன் கூடியபுதிய வரிசை நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் கையெழுத்துடன் கூடிய புதிய நோட்டுகளில், அச்சிடப்பட்ட ஆண்டாக, 2017 குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி, புழக்கத்தில் உள்ள நோட்டுகளுக்கும், இதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது.

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது புழக்கத்தில் உள்ள, 500 ரூபாய் நோட்டுகளும் செல்லும்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...