Wednesday, June 14, 2017

உயரும்...!   ஜி.எஸ்.டி., அமலால் மருந்துகளின் விலை...
2.29 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு


புதுடில்லி, : வரும் ஜூலையில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படும் போது, பெரும்பாலான, அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை, 2.29 சதவீதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.



நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசு, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்றியது. மாநில, ஜி.எஸ்.டி., மசோதாக்களை, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள், சட்டசபைகளில் நிறைவேற்றி வருகின்றன. ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி.,யை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதிகரிக்கும் அபாயம்

இதற்கிடையே, மருந்து பொருட்களின் விலை, ஜி.எஸ்.டி., அமலால் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, நிபுணர்கள் கூறியுள்ளனர். தற்போதுள்ள வரி முறைப்படி, மருந்து பொருட்கள் மீது, 9 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலான மருந்து பொருட்கள் மீது, 12 சதவீதம் வரி விதிப்பதென, மத்திய அரசு நிர்ணயித்து உள்ளது. இதனால், இவற்றின் விலை, 2.29 சதவீதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இருப்பினும், இன்சுலின் போன்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில
அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., வரி, 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. எனவே, இவற்றின் விலை குறையும் என, தெரிகிறது.

எவ்விதம் மாற்றி கணக்கிடுவது

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில், ஹெபாரின், வார்பரின், டில்டியாஸெம், டையாஸெபம், இபுபுரூபென், புரொப்ரனலால்,இமாடினிப் உள்ளிட்டவை உள்ளன.

மருந்து பொருள் கட்டுப்பாட்டு அமைப்பான, என்.பி.பி.ஏ., பட்டியலிடப்பட்ட மருந்துகளின், தற்போதைய விலையை, ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்படும் போது, எவ்விதம் மாற்றி கணக்கிடுவது என்பதற்கான விதியை வகுத்துள்ளது.
கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட, பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு, தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச விலை, ஜி.எஸ்.டி., வரிகள் தவிர்த்து, புதிய அதிகபட்ச விலையாக
இருக்கும்.பட்டியலிடப்படாத மருந்து களின் மீது, ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் அதிகரிக்கும் விலை வித்தியாசத்தை, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என, என்.பி.பி.ஏ., உறுதியாக கூறியுள்ளது.
இன்சுலின் போன்ற மிக அத்தியாவசியமான மருந்துகள் மீது, ஜி.எஸ்.டி., வரி, 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதால், அவற்றின் விலையை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் குறைக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய மருந்துகள் மீது, ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் கிடைக்கும் லாபத்தை, நுகர்வோருக்குகண்டிப்பாக அளிக்க வேண்டும் என, என்.பி.பி.ஏ., திட்டவட்டமாக கூறியுள்ளது.

வதந்திகளை நம்பாதீங்க!

'ஜி.எஸ்.டி., கண்டிப்பாக, ஜூலை, 1ல்அமல்படுத்தப்படும். இதில் தாமதம் ஏற்படும் என, கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என, மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:நாடு முழுவதும், ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்த வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். கடைசி வர்த்தகர் வரை, ஜி.எஸ்.டி., குறித்த தகவல் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மாநில அரசுகளுடன் சேர்ந்து, சி.பி.இ.சி., எனப்படும், மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம், சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி.என்., நிர்வாகதுணை தலைவர் நியமனம்

ஜி.எஸ்.டி., வரி விதிப்பை அமல்படுத்த, தகவல் தொழிற்நுட்ப கட்டமைப்பை ஏற்படுத்தி தரும் அமைப்பான, ஜி.எஸ்.டி.என்., சேவைகள் பிரிவுக்கு, நிர்வாக துணைத் தலைவராக, மூத்த அதிகாரி காஜல் சிங், நேற்று நியமிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த, 1992ல், இந்திய வருவாய் சேவை அதிகாரியாக தேர்ச்சி பெற்ற காஜல் சிங், ஜி.எஸ்.டி.என்., நிர்வாக துணைத் தலைவராக, மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார். மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...