Wednesday, June 14, 2017

பட்டமளிப்பு கவுன் கூடாது: கான்பூர் ஐ.ஐ.டி., அசத்தல்

பதிவு செய்த நாள்14ஜூன்2017 03:53



லக்னோ: 'பட்டமளிப்பு விழாவின்போது, கறுப்பு நிற கவுன் அணியும் பிரிட்டிஷ் கால நடைமுறைக்கு மாற்றாக, பாரம்பரிய உடையான, பைஜாமா, குர்தா, சுடிதார் அணிய வேண்டும்' என, கான்பூர் ஐ.ஐ.டி., கூறியுள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ள உத்தர பிரதேசத்தின் கான்பூரில் அமைந்துள்ளது, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம். வரும், 15 மற்றும் 16ல், இதன் பட்டமளிப்பு விழா நடக்கிறது.

ஐ.ஐ.டி.,யின் பொன்விழாவையொட்டி நடக்கும் இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில், டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.வழக்கமாக, பட்டமளிப்பு விழாவில், கறுப்பு கவுன் அணியும் பழக்கத்துக்கு விடுதலை கொடுக்கும் வகையில், கான்பூர் ஐ.ஐ.டி., புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இது குறித்து ஐ.ஐ.டி., வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

நம் பாரம்பரிய உடைகளான, பைஜாமா, குர்தாவை மாணவர்களும், சுடிதாரை மாணவியரும் அணிந்து, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கலாம். அவரவர் தேர்ந்தெடுத்துள்ள துறைக்கு ஏற்ப, கழுத்தில் அணியும் ரிப்பன் அளிக்கப்படும். பொன்விழா என்பதால், பேராசிரியர்களும், கறுப்பு கவுனுக்கு பதிலாக, பொன்நிறத்தினால் முழுநீள கவுனை அணியலாம். நம் கலாசாரத்துக்கு ஏற்ற காலணியை அணிந்து வரலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு, மாணவர் மற்றும் பெற்றோர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...