Saturday, June 17, 2017

டாக்டர் இருந்தால் மட்டுமே பிரசவம்

பதிவு செய்த நாள்17ஜூன்2017 03:07

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் இருந்தால் மட்டுமே பிரசவம் பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில், 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படுகிறது. பகலில் மட்டுமே, டாக்டர்கள் பணியில் இருப்பர். இரவில், நர்சுகளே பிரசவம் பார்க்கின்றனர். சிக்கலான சமயங்களில் மட்டுமே டாக்டர்களை அழைக்கின்றனர். இதில், சில நேரங்களில் இறப்பு ஏற்படுகிறது. சிவகங்கை மாவட்டம், கொம்புகாரனேந்தல், புதுவயல் ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒரே வாரத்தில் தாயும், குழந்தையும் பலியாகினர். நர்சுகளே பிரசவம் பார்த்ததால், இறப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 'டாக்டர்களை வரவழைத்த பிறகே பிரசவம் பார்க்க வேண்டும். டாக்டர்கள் வர இயலவில்லை என்றால், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டும். பிரசவத்தின் போது, ஆம்புலன்சை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்' என, சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...