ரேஷன் கார்டு வகை மாற்றம் : விளக்க குறிப்பில் அரசு தகவல்
பதிவு செய்த நாள்17ஜூன்2017 00:28
ரேஷன் கார்டின் வகைகள் மாற்றப்பட்ட விபரம், உணவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரிசி கார்டு, சர்க்கரை கார்டு, காவலர் கார்டு, எந்த பொருளும் வாங்காத கார்டு என, நான்கு பிரிவுகளில், ரேஷன் கார்டுகள் இருந்தன. இதுவரை வெளியான உணவு துறை கொள்கை விளக்க குறிப்புகளில், பச்சை, வெள்ளை, காக்கி, வெள்ளை என, வண்ணங்களை குறிப்பிட்டு, அரிசி, சர்க்கரை, காவலர், எந்த பொருளும் வாங்காத கார்டு என, வகைப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், உணவு துறை அமைச்சர் காமராஜ், நேற்று வெளியிட்ட கொள்கை விளக்க குறிப்பில், ரேஷன் கார்டுகளின் வகை மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியதால், ரேஷன் கார்டுகளின் வகை மாற்றப்பட்டுள்ளது. அந்த விபரம், தற்போது வழங்கப்படும், 'ஸ்மார்ட்' கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு, முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற பிரிவில், அரிசி வாங்கும் அனைவருக்கும், ஒரே விதமான சலுகைகளை தொடர்ந்து வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ரேஷன் கார்டு வகைகள் விபரம் - கார்டின் வகை - ரேஷனில் தரும் பொருட்கள் விபரம்
முன்னுரிமை ரேஷன் கார்டு - அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்கள்
முன்னுரிமை ரேஷன் கார்டு, அந்தியோதயா அன்னயோசனா - 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்கள்
முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு - அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்கள்
முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு/ சர்க்கரை விருப்ப கார்டு - அரிசி தவிர்த்து மற்ற பொருட்கள்
முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு, எப்பொருளும் இல்லாதவை - எந்த பொருளும் இல்லை
No comments:
Post a Comment