இதே நாளில் அன்று
பதிவு செய்த நாள்16ஜூன்2017 21:05
1911 ஜூன் 17
வாஞ்சிநாதன், நெல்லை மாவட்டம், செங்கோட்டையில், ரகுபதி ஐயர் - ருக்மணி அம்மாள் தம்பதிக்கு, ௧௮௮௬ல், மகனாக பிறந்தார். செங்கோட்டையில், பள்ளிப் படிப்பை முடித்த இவர், திருவனந்தபுரத்தில், பட்டப்படிப்பு படித்தார்; அரசு பணியில் இருந்தார். சுதந்திர வேட்கை கொண்ட இவர், ஆங்கிலேயருக்கு எதிராக போராட முடிவு செய்தார். அரசு பணியை விட்டு விலகிய இவருக்கு, புதுச்சேரியில் இருந்து தீவிரவாத குழுக்களின் உதவிகள் கிடைத்தன. ஆங்கிலேய ஆட்சியை ஒழித்து கட்ட, ரகசிய கூட்டங்களை கூட்டினார்; நண்பர்களையும் தீவிர மடையச் செய்தார். 1911 ஜூன், 17 அதிகாலை, 6:30 மணிக்கு, மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனில், நெல்லை கலெக்டர் ஆஷ், தன் மனைவியுடன் முதல் வகுப்பு பெட்டியில் அமர்ந்திருந்தார். அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன், அதே துப்பாக்கியால், தன்னையும் சுட்டு வீரமரணம் அடைந்தார். அவர் மறைந்த தினம், இன்று.

No comments:
Post a Comment