Saturday, June 17, 2017

ஜெ., மருத்துவ செலவு ரூ.6 கோடி வழங்க சசிகலா அணி முடிவு

பதிவு செய்த நாள்17ஜூன்2017 05:24




சென்னை : ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான செலவான, ஆறு கோடி ரூபாயை, அ.தி.மு.க., சசிகலா அணி, அப்பல்லோ மருத்துவமனைக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

சிகிச்சை:

முதல்வராக இருந்த ஜெ., உடல் நலக்குறைவால், 2016 செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு மேல் சிகிச்சை பெற்றும் பலனின்றி, டிச., 5ல் இறந்தார். அவருக்கு சிகிச்சை அளித்ததற்கான, ஆறு கோடி ரூபாய் செலவை அரசு ஏற்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.

முடிவு:

இந்நிலையில், நேற்று முன்தினம், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முதல்வர் பழனிசாமி தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், ஜெ.,க்கான மருத்துவ செலவான, ஆறு கோடி ரூபாயை, கட்சி நிதியில் இருந்து வழங்க, முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஆறு கோடி ரூபாய்க்கான காசோலை, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது. அவர் அதை மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்க உள்ளார். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை, வரும், 30ல், மதுரையில் துவக்குவது குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...