Thursday, June 22, 2017

காலண்டர் நினைவாற்றலில் அசத்தும் மாணவன்

பதிவு செய்த நாள்22ஜூன்
2017
00:07

பல்லாவரம் : எதாவது ஒரு ஆண்டின் மாதம், தேதி கூறி, 'அன்று என்ன கிழமை, அந்த மாதத்தின் பண்டிகை, அரசு விடுமுறைகள், விரத நாட்கள்' என, கேட்டால், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், சட்டென்று சரியான தகவலை கூறி, ஆச்சரியப்படுத்துகிறார், குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த, 6ம் வகுப்பு மாணவர் ஆதித்யா.

சென்னை குரோம்பேட்டையை அடுத்த ரங்கா நகர், குருராகவேந்திரா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும், குருபிரசாத்- - பிரியா தம்பதியின் ஒரே மகன் ஆதித்யா. குருபிரசாத், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆதித்யா, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஆதித்யாவிற்கு, குழந்தையில் பேச்சு திறன் குறைவாக இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதில் இருந்து, ஆதித்யா எந்த நேரமும் காலண்டர்களை பார்த்து கொண்டிருந்தார்.ஆதித்யாவிற்கு, 7 வயது இருந்த போது, உறவினர் ஒருவர் இறந்தது குறித்து, அவரது பெற்றோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த உறவினர் இறந்த தேதியை, ஆதித்யாவின் பெற்றோர் கூறியுள்ளனர். அதை கேட்ட ஆதித்யா, சிறிதும் தயங்கமின்றி, 'அந்த கிழமை, தவறு' என, கூறினார். 

அதை கேட்டு ஒரு கனம் அதிர்ச்சியடைந்த பெற்றோர், காலண்டரை பார்த்தபோது, ஆதித்யா கூறியது தான் சரி என்பது தெரிந்தது. அப்போது தான், தன் மகனின் காலண்டர் நினைவாற்றல் திறன் அவர்களுக்கு தெரிந்தது.
அதன்பின், ஆதித்யாவின் காலண்டர் நினைவாற்றலும், அது சம்பந்தமான அவரது செயல்பாடுகளும் அதிகரிக்க துவங்கின. இதனால், மகனின் கல்வி பாதிக்கப்படுமோ என, அவரது பெற்றோர் அச்சப்பட்டனர். ஆனால், படிப்பிலும், காலண்டர் நினைவாற்றலிலும் ஆதித்யா சிறந்து விளங்கினார்.மற்ற பிள்ளைகள் போல், 'டிவி' பார்ப்பதை விரும்பாத ஆதித்யா, எந்த நேரமும் காலண்டரை பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி கொண்டிருந்தார்.
கடந்த அல்லது வரும் ஆண்டு ஏதாவது ஒன்றை குறிப்பிட்டால், அந்த ஆண்டின் அரசு விடுமுறை நாட்களை, மிக சரியாக கூறுகிறார். மகாத்மா காந்தி முதல் தற்போதுள்ள தலைவர்களின் பிறந்த தேதியையும், மறைந்த தலைவர்களின் இறந்த தேதியையும், கூறுகிறார்.

இன்னும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, ஏதாவது ஒரு ஆண்டின், மாதம், தேதியை கூறினால், அது எந்த கிழமை; விரத மற்றும் பண்டிகை நாளா என, கூறுகிறார். 

ஒரு மாதத்தில், ஒரே கிழமை, எந்தந்த தேதிகளில் வருகிறது என, ஆதித்யா துல்லியமாக கூறுவது, அவரது நினைவாற்றல் திறனை பார்த்து, அனைவரும் அதிசயித்து போகின்றனர்.எந்த நேரமும் காலண்டருடன் இருக்கும் ஆதித்யா, எதாவது ஒரு ஆண்டின் காலண்டரை எழுதி, பண்டிகை நாட்கள், கிழமை, அமாவாசை, பவுர்ணமி என, அனைத்து தகவல்களையும், மிக சரியாகவும், துல்லியமாகவும் குறிப்பிட்டு வைத்துள்ளார்.

மகனின் திறமையை, எவ்வாறு மேம்படுத்தி செல்வது என, அவரது பெற்றோர் சிந்தித்து வருகின்றனர். மேலும், அவரின் பேச்சு திறனை சரி செய்யவும் முயற்சி செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Flight from Kuwait leaves behind half of luggage

Flight from Kuwait leaves behind half of luggage Jan 9, 2025, 03.55 AM IST  Chennai: Many Air India Express passengers from Kuwait were in f...