Saturday, June 24, 2017

அதிக விலை 'ஷார்ப்னர்' விற்றதால் அபராதம்

பதிவு செய்த நாள்24ஜூன்
2017
01:33

திருநெல்வேலி : திருநெல்வேலியை சேர்ந்தவர் தேவி, தம் குழந்தைகளுக்காக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பல்பொருள் அங்காடியில், பென்சில் சீவும் ஐந்து ஷார்ப்னர்கள் வாங்கினார். தலா, மூன்று ரூபாய் மதிப்புள்ள அவற்றிற்கு, 60 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து, 11 ரூபாய் தள்ளுபடி செய்துஉள்ளனர். இருப்பினும், 34 ரூபாய் அதிகமாக வசூலித்து உள்ளனர். 

தேவி, நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி மற்றும் உறுப்பினர்கள், பல்பொருள் அங்காடிக்கு, 5,000 ரூபாய் அபராதமும், 3,000 ரூபாய் வழக்குசெலவும், அதிமாக பெற்ற, 34 ரூபாயை திருப்பி அளிக்கவும் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 09.01.2025