Thursday, June 22, 2017

சிங்கிள் பேஸ்' மின் மீட்டர் தட்டுப்பாடு : 31 ஆயிரம் பேர் காத்திருப்பு
பதிவு செய்த நாள்22ஜூன்
2017
02:02

மதுரை: வீடுகளுக்கான 'சிங்கிள் பேஸ்' மின் மீட்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின் இணைப்புக்காக 31 ஆயிரத்து 307 பேர் பல மாதமாக காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் அணு மின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள், இயற்கை எரிவாயு மின் நிலையங்கள், காற்றாலை மின் உற்பத்தி, மத்திய மின் தொகுப்பு என பல்வேறு இனங்களில் இருந்து மின்சாரம் கிடைப்பதால் மின் தட்டுப்பாடு ஏற்படவில்லை. எனினும் விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்படும் மின்சாரத்தில் பற்றாக்குறை நிலவுவதால், முறை வைத்து விவசாய தோட்டங்களுக்கு வழங்கப்படுகிறது.

தரமில்லா மீட்டர்
தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. வீடுகளுக்கான 'சிங்கிள் பேஸ்' மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் நுகர்வோருக்கு, உடனுக்குடன் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கடந்த 2016ல் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மின் மீட்டர்களை பொருத்த அனுமதிக்கப்பட்டது. இவை தரம் குறைந்ததாக இருந்ததால் மின் வாரியம் தடை விதித்தது.

எனினும், வாரியம் சார்பில் தரமான மின் மீட்டர்களை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

31 ஆயிரம் பேர்
தமிழகம் முழுவதும், வீடுகளுக்கான சிங்கிள் பேஸ் மின் இணைப்பு கேட்டு 31 ஆயிரத்து 307 பேர் விண்ணப்பித்துள்ளனர். மீட்டர் இல்லாததால், புதிய வீடு கட்டுவோர் மற்றும் பழுதான மீட்டர்களை மாற்ற விண்ணப்பித்தோர் பல மாதமாக காத்திருக்கின்றனர். சிங்கிள் பேஸ் மீட்டர் விலை 950 ரூபாய். எனினும் அவசர தேவைக்காக '3 பேஸ்' மின் இணைப்பு தருவதாக மின் வாரியம் கூறுகிறது. '3 பேஸ்' மீட்டர் 4000 ரூபாய். மின் கம்பத்தில் இருந்து வீடுகளுக்கு ஒயர் இணைப்பு செலவு 8,௦௦௦ ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை.கேட்டதும் இணைப்புமின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் வாரியம் சார்பில் 'சிங்கிள் பேஸ்' மீட்டர் கொள்முதலில் தாமதம் ஏற்பட்டது; பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. தற்போது மீட்டர்கள் வந்துள்ளன. மூன்று முதல் ஒரு வாரத்திற்குள் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கப்படும். '3 பேஸ்' மீட்டர்களும் உள்ளன. 'ஜூலை 1 முதல் விண்ணப்பித்த மறுநாளே இணைப்பு வழங்க வேண்டும்' என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

Flight from Kuwait leaves behind half of luggage

Flight from Kuwait leaves behind half of luggage Jan 9, 2025, 03.55 AM IST  Chennai: Many Air India Express passengers from Kuwait were in f...