ஐஏஎஸ் தேர்வில் சிதம்பரம் டாக்டருக்கு தமிழக அளவில் 5-வது இடம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைக் சேர்ந்த டாக்டர் நந்தினிதேவி சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் தேர்விலேயே அகில இந்திய அளவில் 54-வது இடத்திலும், தமிழக அளவில் 5-வது இடத் திலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
சிதம்பரம் முத்தையா தொழில் நுட்பக் கல்லூரி முதல்வராக உள்ளவர் குப்பன். இவரது மனைவி குமுதவள்ளி. இவர் சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி ஆசிரியை யாக உள்ளார். இவர்களது மகள் நந்தினிதேவி. இவர் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்டூ வரை படித்தார். பிளஸ் டூ தேர்வில் 1,174 மதிப்பெண்கள் பெற்று கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றார். பின்னர் மதிப்பெண் தகுதி அடிப்படையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயின்றார். படித்து முடித்த பின்னர் சென்னையில் சிவில் சர்வீஸ் பயிற்சி பெற்று முதல் தேர்வு எழுதினார்.
தற்போது நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்று முதல் தேர்விலேயே அகில இந்திய அளவில் 54வது இடத்திலும், தமிழக அளவில் 5-வது இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment