900 ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்: இன்டிகோ விமான நிறுவனம் மழைக் கால சலுகை அறிவிப்பு
By DIN | Published on : 12th June 2017 08:37 PM |
இன்டிகோ (IndiGo) விமான நிறுவனம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழைக் கால சலுகையாக ரூ.899 க்கு குறிப்பிட்ட பகுதிகளிடையே விமான பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி
தில்லி-கோவை, கோவா- சென்னை, சென்னை-போர்ட் பிளைர், மும்பை-கோவா, ஜம்மு-அமிர்தசரஸ், தில்லி-உதய்பூர், அகமதாபாத்-மும்பை, ஹைதராபாத்-மும்பை, மற்றும் கொல்கத்தா-அகார்தலா உள்ளிட்ட பகுதிகளுக்கிடையான விமான பயணங்களுக்கு சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாட்களுக்குள் முன் பதிவு செய்யும் டிக்கெட்கள் ஜூலை 1 மற்றும் செப்டம்பர் 30 தேதிகளில் செல்லுபடியாகும். மேலும் இந்த சலுகை கோவா, குவஹாத்தி, ஹைதராபாத், இம்பால், இந்தூர், ஜெய்ப்பூர், ஜம்மு, கொச்சி, கொல்கத்தா, கோழிக்கோடு, லக்னோ, மதுரை, மங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து அகமதாபாத், அஹ்மதாபாத், அம்ரித்ஸர், பாக்தோக்ரா, பெங்களூரு, புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, கோவை, டெஹ்ராடூன், டெல்லி, திப்ருகார், , மும்பை, நாக்பூர், பாட்னா, போர்ட் பிளேர், புனே, ராய்பூர், ராஞ்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம், உதய்பூர், வதோதரா, வாரணாசி மற்றும் விசாகப்பட்டினம், ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் நிறுத்தப்படாத விமானங்களில் செல்லுபடியாகும்.
தில்லி- மும்பை இடையான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.7000. ஆனால் இந்த ஜூன் மாதம் மட்டும் ரூ. ரூ.2,100 கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோஏர் (GoAir) விமானசேவை நிறுவனமும் இதேபோன்ற ஆஃபர்களை வழங்குவதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment