வட்டி குறைப்பால் மவுசு இழக்கும் செல்வமகள் சேமிப்புத் திட்டம்
By DIN | Published on : 13th June 2017 03:23 AM
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால், அதில் சேருவோர் எண்ணிக்கைக் குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்தது முதல், பெண்களின் பாதுகாப்புக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக, ஆண்களுக்கு நிகராக பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்து வருவதைத் தடுக்கும் நோக்கில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் கடந்த 2015 ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்டது.
இத்திட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பயனடைவதோடு, 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு திட்டத்தில் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.1,000 செலுத்த முடியும். அதிகபட்சமாக ஒரு பெண் குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையில் சேமிக்க முடியும். தொடர்ந்து 14 ஆண்டுகள் திட்டத்தில் பணம் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் சேர்ந்தால் வருமான வரியில் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதோடு, திட்டம் கொண்டு வரப்பட்ட ஆரம்பக் கட்டத்தில் வட்டி விகிதம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் இருக்கும் இதுபோன்ற சாதகத்தால் பெண் குழந்தை வைத்துள்ள பெற்றோர்கள், திட்டத்தில் சேர அதிகம் ஆர்வம் காட்டினர். ஆனால் தற்போதய நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.5 சதவீதமாகவும், அதன் பிறகு 8.4 சதவீதமாகவும் வட்டி குறைக்கப்பட்டதால் இத்திட்டத்தில் சேருவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
ஒரு தலைமை அலுவலகம், 46 துணை அலுவலகம், 104 பகுதி நேர அலுவலகங்களைக் கொண்ட வேலூர் கோட்டத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் தொடங்கப்பட்டது முதல், கடந்த 2017 மே மாதம் வரையில் 21,406 பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தில் வட்டி குறைக்கப்பட்டதோடு, கடனுதவி பெற வாய்ப்பு இல்லை போன்ற காரணங்களால் இதைக் காட்டிலும் அஞ்சலகங்களில் உள்ள மற்ற திட்டங்களில் சேர பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து வேலூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் கே.விஜயா கூறியதாவது: பெண் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானத் திட்டமாக வாடிக்கையாளர்கள் கருதியதால், இத்திட்டம் கொண்டு வரப்பட்ட இரண்டு ஆண்டுகளில் அகில இந்திய அளவில் தமிழக அஞ்சல் வட்ட உறுப்பினர்கள் சேர்க்கையில் முதலிடம் பெற்றது.
தற்போது இத்திட்டத்தில் வட்டி குறைக்கப்பட்டதோடு, கடனுதவி பெற இயலாது உள்ளிட்ட காரணங்களால் புதிதாக சேருவோர் எண்ணிக்கைக் குறைந்துள்ளது.
இருப்பினும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டிருக்கும் இத்திட்டத்தில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைச் சேர்க்க அனைத்து தபால் நிலையங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

No comments:
Post a Comment