Wednesday, June 14, 2017

பத்திரப்பதிவு அலுவலகங்களில்விரைவில் வருமான வரி 'ரெய்டு'

தமிழகத்தில், சில இடங்களில், உயர் மதிப்பு சொத்து பரிவர்த்தனைகள் மறைக்கப்படுவது தெரிய வந்துள்ளதால், பத்திரப்பதிவு அலுவலகங்களில், 'ரெய்டு' நடத்த, வருமான வரித்துறை முடிவெடுத்துள்ளது.





இது குறித்து, தமிழகம், புதுச்சேரி வருமான வரித்துறை நுண்ணறிவு மற்றும் குற்றப் புலனாய்வு இயக்குனர், ஆர்.வி.ரெட்டி கூறியதாவது:

பான்' எண் வாங்க வேண்டும்

வருமான வரிச் சட்டம், '50 சி' பிரிவுப்படி, பத்திரப்பதிவு அலுவலகங்களில், 30 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புள்ள பரிவர்த்தனையில் ஈடுபடும் நபர்கள் குறித்து, வருமான வரித்துறைக்கு, சார் - பதிவாளர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதே போல், 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமான பரிவர்த்தனை நடந்தால், அவர்களது, 'பான்' கார்டு எண் பெற வேண்டும். ஆண்டுக்கு, 50 லட்சம்ரூபாய்க்கு மேல், பணப் பரிவர்த்தனை செய்தவர் பற்றிய தகவல்களையும், வங்கிகள் தெரிவிக்க வேண்டும். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், பரிவர்த்தனை செய்தவர்களிடம், 'பான்' எண் வாங்க வேண்டும்.

சோதனை

நகைக் கடைகளில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல், நகை வாங்குவோர் விபரங்களும், வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும். 'மியூச்சுவல் பண்டு' முதலீடு, வெளிநாடு பயணம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு முதலீடுகள் குறித்த விபரங்களையும்பெறுகிறோம்.
இவற்றில், பத்திரப்பதிவு அலுவலகங்களில், சில முக்கிய பரிவர்த்தனைகள், குறிப்பாக, அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் பரிவர்த்தனைகள் மறைக்கப்படுவதாக, தகவல்

வந்துள்ளது. அதனால், பத்திரப்பதிவு அலுவலகங்களில் சோதனை நடத்த முடிவெடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பதிவு துறைக்கு எச்சரிக்கை

ஆர்.வி.ரெட்டி கூறியதாவது:சமீபத்தில், தமிழக அரசு, பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பை குறைத்தது. அப்போது, 'ஜூன், 13 வரை, பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணப் பதிவுக்கு, உச்சவரம்பின்றி ரொக்கமாக பெறலாம்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டது, எங்களது கவனத்திற்கு வந்தது. உடனே, தமிழக அரசை எச்சரித்தோம்; அதை, திரும்ப பெற ஒப்புக் கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...