எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்?
பதிவு செய்த நாள்21ஜூன்
2017
23:14
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகத்தை நாளை துவங்க, மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், 'நீட்' தேர்வு அடிப்படையில், இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதனால், 88 ஆயிரம் மாணவர்கள், இந்த தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள், வரும், 26ல், வெளியாகும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுக்கு முன், மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப வினியோகத்தை துவங்க, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., அறிவுறுத்தியுள்ளது. அதனால், தமிழகத்தில் விண்ணப்பம் வினியோகத்தை நாளை துவக்க, மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில், 'நீட் தேர்வு அடிப்படையிலான, மருத்துவ மாணவர் சேர்க்கையில், உள் ஒதுக்கீடு வழங்கப்படும். எம்.சி.ஐ., அறிவுரைப்படி, விண்ணப்ப வினியோகத்தை, நாளை துவக்க, அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது' என்றனர்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment