Saturday, June 3, 2017

முதுநிலை ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில்... தில்லுமுல்லு!

பள்ளி கல்வித் துறையின், ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில், வசூலுக்காக, 1900 இடங்கள் மறைக்கப்பட்டு, தில்லுமுல்லு நடந்துள்ளது. இதனால், கொதித்தெழுந்த ஆசிரியர் சங்கங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றுள்ளன.

பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டைய னும், செயலராக உதயசந்திரனும் பொறுப் பேற்ற பின், பொதுத் தேர்வில் ரேங்கிங் முறை ஒழிப்பு, பிளஸ் 1க்கு கட்டாய பொதுத் தேர்வு உட்பட, பல மாற்றங்கள் அமலாகின. இதனால், துறையில் இனி முறைகேடுகள் நடக்காது என, ஆசிரியர்களும், பெற்றோரும் நம்பினர்.

மாற்றம்

இந்நிலையில், வழக்கமாக,ஜூலை, ஆகஸ்டில் நடக்கும் ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங், மே மாதத்திற்கு மாற்றப்பட்டது. இதில், 'காலி இடங்கள் மறைக்கப்படாமல், பேரத்திற்கு வழியின்றி, வெளிப்படையாக கவுன்சிலிங் நடக்கும்' என, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், மே,24ல் நடந்த, முதுநிலை ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில், 1,900 இடங்களை, சத்தமின்றி மறைத்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, உத்தரவு பெற்றுள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது:

தமிழகம் முழுவதும், 100 உயர்நிலைப் பள்ளி கள் மேல்நிலைப் பள்ளிகளாகவும்; 150 நடு நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக வும், தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. இவற்றில், மேல்நிலைப் பள்ளிகளில், தலா, ஒன்பது முது நிலை ஆசிரியர்களும், ஒரு தலைமை ஆசிரியர் பணியும்; உயர்நிலைப் பள்ளிகளில், தலா, ஐந்து முதுநிலை ஆசிரியர் களும், ஒரு தலைமை ஆசிரியர் பணியும் ஒதுக்கப் பட்டுள்ளது.

சந்தேகம்

இந்த, 1,900 இடங்களை, கவுன்சிலிங்கில் இடம் பெறச் செய்வோம் என, அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். ஆனால், அந்த இடங்களை மறைத்து, கவுன்சிலிங்கை முடித்து விட்டனர்.

வெளிப்படைத் தன்மை இல்லாமல், மறைக் கப்பட்ட இடங்களை, வேறு விதமாக நிரப்ப முயற்சி நடக்கிறதோ என, ஆசிரியர்கள் சந்தே கம் அடைந்து உள்ளனர். அதனால், நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தோம். நீதி மன்ற உத்தரவு படி, மீண்டும் கவுன்சிலிங் நடத்த கோரிக்கை விடுத்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

நீதிமன்ற உத்தரவு என்ன?

கே.பி.ஓ.சுரேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவு:

இரு தரப்பினர் ஒப்புதலுடன், இந்த வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனர், மனு தாரரின் மனுவை பரிசீலித்து, சட்டப்படி முடிவு எடுக்க வேண்டும். இந்த உத்தரவு கிடைத்த, இரண்டு வாரத்திற்குள் மனுதாரரை அழைத்து, அவரது கோரிக்கையை கேட்டு, உரிய முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Posted by kalviseithi.net

No comments:

Post a Comment

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’ Tamaghna.Banerjee@timesofindia.com  09.01.2025 Kolkata : Three days after she was...