Saturday, June 3, 2017

ரூ.2 லட்சத்துக்கு மேல்  ரொக்கமாக பெற்றால் அபராதம்
புதுடில்லி:'எந்த ஒரு பரிவர்த்தனையிலும், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக வாங்கினால், அதே அளவு தொகையை, அபராதமாக செலுத்த நேரிடும்' என, வருமான வரித் துறை எச்சரித்து உள்ளது.






ஊக்குவிப்பு

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை தொடர்ந்து, ரொக்கப் பரிவர்த்தனையை குறைக்கவும், மின்னணு பரிவர்த்தனையை அதிகரிக்கவும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை நடந்தால், அந்த பணத்தை வாங்குபவர்கள், அதே அளவு தொகையை அபராதமாக செலுத்தும்வகையில், நிதி மசோதா வில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இது, இந்த ஆண்டு, ஏப்ரல், 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில், பல்வேறு பத்திரிகைகளில், வருமான வரித் துறை நேற்று வெளியிட்டுள்ள விளம்பரங்களில் கூறியுள்ளதாவது:
கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், ரொக்கப் பயன் பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்யக் கூடாது.

ஒரு நாளில் அல்லது ஒரு நபர் அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை நடந்தால், பணத்தை வாங்குபவர்கள், அதே அளவு தொகையை

அபராதமாக செலுத்த நேரிடும். இது போன்ற பரிவர்த்தனைகள் நடப்பது தெரியவந்தால், blackmoneyinfo@incometax.gov.in என்ற இ - மெயில் முகவரிக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் தருவோர் குறித்த விபரங்கள் ரகசிய மாக வைத்திருக்கப்படும். இவ்வாறு அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024