Saturday, June 10, 2017

மீன் மருந்தை பெறுவதற்கு ஹைதராபாத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்த ஆஸ்துமா நோயாளிகள்

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத் நகரில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து விநியோகம் நேற்று தொடங்கியது. இதைப் பெற்றுக்கொள்வதற்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டுள் ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் விநியோகம் செய்யப்படும் மீன் மருந்து மிகவும் பிரபலமானது. இதைச் சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா முற்றிலும் கட்டுப்படுவ தாக கூறப்படுகிறது. இதை பெற்றுக் கொள்ள தெலங்கானா மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வருவது வழக்கம்.
புகழ்பெற்ற பத்தனி சகோதரர் கள் இதைப் பல ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருகின் றனர். உயிருடன் இருக்கும் அசரை மீனின் வாயில் தாங்கள் தயாரித்த ஆஸ்துமா மருந்தைத் திணித்து, அதனை நோயாளிகள் விழுங்கச் செய்கின்றனர். இதனால் ஆஸ்துமா முற்றிலும் கட்டுப்படுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். சைவ நோயாளிகளுக்கும் மாற்று மருந்து வழங்கப்படுகிறது. மேலும் வீடுகளுக்கும் மருந்து கொடுத்து அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் ஹைதராபாத், நாம்பல்லி பொருட்காட்சி மைதானத் தில் மீன் மருந்து விநியோகம் நேற்று காலை தொடங்கியது. தெலங்கானா மாநில மீன் வளம் மற்றும் கால் நடைத்துறை அமைச்சர் தலசானி ஸ்ரீநிவாஸ் யாதவ் இதை தொடங்கி வைத்தார்.

மீன் மருந்து பெறுவதற்காக இந்த மைதானத்தில் 2 நாட்களுக்கு முன்பிருந்தே மக்கள் குவியத் தொடங்கினர். இவர்களுக்குத் தேவையான இருப்பிடம், உணவு, கழிப்பிட வசதிகளை தெலங்கானா அரசு ஏற்பாடு செய்திருந்தது. கட்டுக்கடங்காத கூட்டத்தைச் சமாளிக்க போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மீன் மருந்து விநியோகம் நாளை வரை நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024