Saturday, June 10, 2017

முடியும் தருவாயில் சாலை... இன்று பூமி பூஜை போட்ட அமைச்சர் உதயகுமார்

சே.சின்னதுரை



மதுரை டி.கல்லுப்பட்டி பகுதியில் அக்ரகாரம் சாலையில் 7 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான தார்சாலை சுமார் 2 ஆண்டுகளாக அமைக்கப்பட்டு வருகிறது. அந்த சாலை முடியும் தருவாயில் இருக்கும்போது தற்போது அதற்கு பூமி பூஜையை போட்டுள்ளனர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், திருப்பரம்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே போஸூம்.

பூமி பூஜை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயகுமார் பேசிக்கொண்டிருக்கும்போது, எய்ம்ஸ் மருத்துவமனை வராவிட்டால் பதவி விலகுவதாக சொல்லியிருக்கிறீர்களே. அப்படியென்றால் மதுரையில் எய்ம்ஸ் வந்துவிடுமா என்று கேட்டனர். அப்போது குறுக்கிட்டு பேசிய எம்.எல்.ஏ போஸ், "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லையென்றால் மதுரையிலுள்ள 10 எம்.எல்.ஏக்களும் பதவி விலகுவோம். 10 எம்.எல்.ஏக்களில் சில எம்.எல்.ஏக்கள் எதிர்க்கட்சியிலும் வேறு அணியில் இருந்தாலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவேண்டும் என்பதற்காக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மதுரையில் எல்லா எம்.எல்.ஏக்களும் பதவி விலக வலியுறுத்துவோம்" என்றார்.

பின்னர் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால்தான் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். பலதரப்பட்ட மக்கள் இங்குவர வசதியாக இருக்கும். மதுரையில்தான் விமானநிலையம், ரயில்நிலையம், பேருந்துகள் என சகல வசதிகள் என்று சிறப்பாக உள்ளது. எனவே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவேண்டும் என்று நினைக்கிறோம். முதல்வரிடமும் வலியுறுத்தியுள்ளோம். அவர் மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளார் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரும் என்று நம்புகிறோம்" என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024