Sunday, June 4, 2017

பயணியிடம் ரூ.20 லட்சம் 'அபேஸ்' ஹவாலா பணமா என விசாரணை
பதிவு செய்த நாள்04ஜூன் 3 2017 01:31




கடலுார், கடலுாரில், பஸ் பயணியிடம், 20 லட்சம் ரூபாயை பறித்து, பதுக்கி வைத்திருந்த போலீசார் சிக்கினர். இது, ஹவாலா பணமா என, விசாரணை நடக்கிறது.

கடலுார் மாவட்ட எல்லையான ஆல்பேட்டை சோதனை சாவடியில், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில், போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் இருந்து, கடலுார் வந்த அரசு பஸ்சை நிறுத்தி, சோதனையிட்டனர். பயணி ஒருவர், லெதர் பேக்குடன் இருந்தார். அவரை கீழே இறக்கி, விசாரித்தனர்.

அவரது பேக்கில், 50 லட்சம் ரூபாய் இருந்தது. விசாரணைக்கு பின், அந்நபரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி, கடலுார் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு பேருந்து நிறுத்தத்தில் இறக்கி அனுப்பியுள்ளனர்.
அந்த பயணி, தன் நண்பர்கள் மூலமாக, போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதில், தான் 50 லட்சம் ரூபாய் கொண்டு வந்ததாகவும், போலீசார், 20 லட்சம் ரூபாயை பறித்து, 30 லட்சத்துடன் தன்னை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கடலுார் புதுநகர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, சோதனை சாவடிக்கு அருகில் உள்ள புதரில் இருந்து, லெதர் பேக் ஒன்றை கண்
டெடுத்தனர். அதில், 2,000 ரூபாய் நோட்டுகள், ஐந்து கட்டு, 500 ரூபாய் நோட்டுகள், 20 கட்டு என, மொத்தம், 20 லட்சம் ரூபாய் இருந்தது.

போலீசார் 'சஸ்பெண்ட்'

ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் பணியில் இருந்த, மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஏட்டுகள் ரவிக்குமார் செல்வராஜ், ஆயுதப்படை போலீஸ்காரர் அந்தோணிசாமிநாதன் ஆகிய மூவரிடமும், எஸ்.பி., விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பின், மூவரும், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையில், பஸ் பயணி கொண்டு வந்தது, ஹவாலா பணமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024