Sunday, June 4, 2017

கதிர் வீச்சை தடுக்கும் புதிய ஆடை மதுரை டாக்டர் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்ஜூன் 03,2017 23:20



மதுரை, எக்ஸ்ரே மையங்களில் கதிர் வீச்சை தடுக்கும் ஆடையை, மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி ரேடியோலாஜி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கண்டுபிடித்துள்ளார்.

அவர் கூறியதாவது: எக்ஸ்ரே மையங்களுக்கு நோயாளிகளுடன் வருவோர் மற்றும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோர் கதிர்வீச்சை தடுக்கும் 'லெட் ஏப்ரான்' எனும் ஆடையை பயன்படுத்துகின்றனர். இதற்கான மாற்று ஆடையை கண்டு பிடித்துள்ளேன்.பிஸ்முத், ஆன்டிமோனி, பேரியம் சல்பேட், பாலிமர் ஆகிய மூலப்பொருட்களை கொண்டு தயாரித்தேன். இது 'லெட் ஏப்ரான்' ஆடையை விட 25 சதவீதம் கதிர்வீச்சை தடுக்கும். சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காது. விலை குறைவு. 3 கிலோ எடை கொண்டது. மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.

மடித்து வைக்க, மறு சுழற்சி, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. ஐந்து ஆண்டு ஆராய்ச்சிக்கு கிடைத்த பரிசு இது.இந்த ஆடையை உருவாக்க 75 ஆயிரம் ரூபாய் செலவானது. இந்திய அளவில் லெட் ஏப்ரானுக்கு முதல் மாற்று ஆடை என்ற பெருமை பெற்றுள்ளது. ஆடை ஒன்று 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தயாரிக்கலாம். மொத்தமாக தயாரிக்கும்போது செலவு குறையும். இக்கண்டுபிடிப்பை அங்கீகரித்து ஆதித்யா பிர்லா நினைவு மருத்துவமனை விருது வழங்கியது, என்றார்.

இவரது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் பெற ஏ.இ.ஆர்.பி. (அட்டாமிக் எனர்ஜி ரெகுலேஷன் போர்டு) பரிந்துரைக்காக அனுப்பப்படும் என டீன் வைரமுத்து ராஜூ தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024