Thursday, June 15, 2017


ஐந்து பெரிதா? ஆறு பெரிதா? அவையில் எழுந்த சிரிப்பலை

By DIN  |   Published on : 15th June 2017 01:25 AM  |  
ஐந்து பெரிதா, ஆறு பெரிதா என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்த விளக்கத்துக்குப் பேரவைத் தலைவர் தனபால் அளித்த பதிலால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
வனத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புதன்கிழமை பேசியது:
ஐந்து (விலங்கு) சிறிது, ஆறுதான் (மனிதர்) பெரிது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சுனாமி தாக்குதலின்போது பலியானவர்கள் பெரும்பாலும் ஆறறிவு உள்ள மனிதர்கள்தான். பறவைகள், விலங்குகள் போன்றவை சுனாமி ஆபத்தை முன்பே உணர்ந்து கொண்டு உயரமான இடங்களுக்குச் சென்றுவிட்டன. எனவே அவை தப்பின என்றார்.
இறுதியாக திண்டுக்கல் சீனிவாசன் உரையை முடித்ததும், பேரவைத் தலைவர் தனபால் ஐந்தும் பெரிதுதான் ஆறும் பெரிதும்தான். உங்கள் உரையும் பெரிதுதான் என்றார். அவையில் ஒரே சிரிப்பலை எழுந்தது.

    No comments:

    Post a Comment

    NEWS TODAY 28.12.2024