மேல்மருவத்தூர் - தொழுப்பேடு இடையே நாளை ரயில் சேவையில் மாற்றம்
By DIN | Published on : 20th June 2017 04:40 AM | மேல்மருவத்தூர் -
தொழுப்பேடு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் ரயில் சேவையில் புதனிகிழமை (ஜூன் 21) மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண் 12897: புதுச்சேரி - புவனேஷ்வர் வாராந்திர விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு சென்னை எழும்பூருக்கு 3 மணி நேரம் தாமதமாக வந்தடையும்.
ரயில் எண் 12661: சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் மேல் மருவத்தூரில் 30 நிமிஷம் நிறுத்தப்படும்.
ரயில் எண் 12637: சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் விரைவு ரயில் மதுராந்தகத்தில் 10 நிமிஷம் நிறுத்தப்படும்.
No comments:
Post a Comment