ஸ்டென்ட் கூடுதல் விலைக்கு விற்பனையா? அரசுக்கு புகார் தெரிவிக்கலாம்
By DIN | Published on : 21st June 2017 04:14 AM |
இதய அடைப்பை நீக்க உதவும் ஸ்டென்ட் (வலைக்குழாய்) எனும் உபகரணம் தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால், அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம் என தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சுகாதாரத் துறை செயலர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலைக்குழாய் இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், மருத்துவமனை பிரதிநிதிகள், தமிழ்நாடு அரசு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வலைக்குழாய் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைப்பதற்கு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட வேண்டும். மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை 2013-இன் விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும். செயற்கைத் தட்டுப்பாட்டை ஊக்குவிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும் ஸ்டென்ட் தட்டுப்பாடு, அதிக விலை குறித்து புகார் தெரிவிக்கலாம்.
இதுதொடர்பான புகார்களை www.nppaindia.nic.in என்ற இணையம், 1800 111 255 - கட்டணமில்லா தொலைபேசி எண், 99582 17773 என்ற கட்-செவி அஞ்சல் எண், 044 2432 1830 -தொலைபேசி எண் ஆகியவற்றின் மூலம் தெரிவிக்கலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment