Friday, June 2, 2017

Posted Date : 15:45 (02/06/2017)

2 மயக்க ஊசி போட்டு யானையைப் பிடித்தனர்! 8 மணி நேரப் போராட்டம் முடிவுக்கு வந்தது!

தி.விஜய்

சகாயராஜ் மு






நான்கு பேரை மிதித்துக்கொன்ற காட்டு யானைக்கு இரண்டு மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர். எட்டு மணி நேரமாக நடந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் கிராமத்தில் இன்று அதிகாலை, காட்டு யானை புகுந்தது. இந்த யானை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி, வெள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம், ஜோதிமணி, பழனிசாமி ஆகிய நான்கு பேரை மிதித்துக் கொன்றது. மூன்று பேர் காயமடைந்தனர்.



இந்தநிலையில், யானையைப் பிடிக்க வனத்துறையினர் கும்கி யானையை வரவழைத்தனர். இருந்தாலும் யானையைப் பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வந்தனர். பின்னர் மயக்க ஊசி செலுத்தி யானையைப் பிடிக்க முயன்றனர். யானை அங்கும் இங்கும் ஓடியதால் மீண்டும் யானைக்கு மயக்க ஊசி போடப்பட்டது. இதையடுத்து கும்கி யானை உதவியுடன் காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து லாரியில் ஏற்றினர். இந்த யானை டாப்சிலிப்பில் உள்ள வரகழி முகாமுக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.

காட்டு யானையைப் பிடித்ததன் மூலம் 8 மணி நேரப் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024