“தினமும் சிரிச்சு பேசிட்டு இருந்த இடம் இப்படியா போகும்!” - கலங்கும் சென்னை சில்க்ஸ் ஊழியர்கள்
vikatan news
மு.பார்த்தசாரதி
சென்னையின் சுட்டெரிக்கும் வெயிலில் எண்ணெய்யை ஊற்றியதுபோல, தி.நகர் வெப்பத்தில் கொதிக்கிறது. நேற்று, சென்னை சில்க்ஸில் பற்றிக்கொண்ட தீயின் வேகம் கட்டற்றது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வியர்வை வழிய தீயணைப்பு வீரர்களும் காவல் துறை அதிகாரிகளும் தீயோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். இருநாள்களுக்கு முன் பிரகாசமான விளக்குகள், கவர்ந்து இழுக்கும் விளம்பரப் பலகைகளால் சாலையில் செல்வோரைக்கூட திரும்பிப் பார்க்க வைத்த கடை இப்போது கருகிக் கிடக்கிறது. அதன் அருகில் இருக்கும் கட்டடங்களுக்கும் இதனால் கடும்பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை சில்க்ஸில் பணிபுரியும் ஊழியர்கள் எங்கிருக்கிறார்கள் எனத் தேடினோம். அந்தப் பகுதியில் ஒருவரையும் பார்க்க முடியவில்லை.
கட்டடத்தின் பின்புறமுள்ள பார்க்கிங் வழியாக சென்றால் ஆண் ஊழியர்கள் சிலர் இருந்தனர். அவர்களிடம் பேச முயன்றபோது, தீ விபத்து தொடர்பாக ஊழியர்கள் யாரும் ஊடகத்தினரிடம் பேசக்கூடாது என்று அதிகாரிகள் உத்தரவு போட்டுவிட்டார்களாம். அதனால், யாரும் நம்மிடம் பேசத் தயாராக இல்லை.
நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்த களைப்பில் ஓரமாய் அமர்ந்திருந்தோம். அருகே இருந்த ஊழியர் ஒருவர், “இங்க இருக்குற யாரும் எதுவும் பேச மாட்டாங்க. வேளச்சேரியில இருக்குற கடைக்கு போங்க... இந்தக் கடையில இருந்தவங்க எல்லாரையும் அங்கதான் மாத்தி விட்டுருக்காங்க” என்று சொன்னார். வேளச்சேரிக்குப் புறப்பட்டோம். வேளச்சேரி கடையிலிருந்து வெளியே வந்த ஒரு பெண் ஊழியர் பேசியபோது, "கடை எரிஞ்சதுல மனசே சரியில்லை" எனத் தயக்கத்தோடு பேசினார்.
“பேரு, போட்டோ எல்லாம் வேணாங்க. நான் சென்னை வந்து நாலு வருசமாகுது. என்னோட சொந்த ஊரு திருநெல்வேலி. ரெண்டு வேளை சாப்பாட்டுக்கே சிரமப்பட்டுக்கிட்டு இருந்தோம். இங்க வேலைக்கு வந்தப்பறம் பரவாயில்லை. சிக்கனமா இருந்து வீட்டுக்குப் பணம் அனுப்பி வைச்சிட்டு இருக்கேன். நகையில் இத்தனை டிஸைன் இருக்குனு இங்கே பார்த்தப்பதான் தெரிஞ்சுது. சில நகைகள் விலை அதிகமா இருக்கும், அதெல்லாம் பார்க்கும்போது ஆச்சர்யமா இருக்கும். அந்த நகை நல்லா இருக்கு, இது நல்லா இல்ல, இந்த டிரெஸ் சூப்பரா இருக்குனு என்கூட வேலைப் பார்க்கிற ஃப்ரெண்ட்ஸ்ங்க கூட பேசிட்டு இருப்போம்.
நேத்து காலைல நாலு மணிக்கெல்லாம் கடையில தீப்புடிச்சிடுச்சுன்னு எங்களுக்கு மெசேஜ் வந்துடுச்சு. சரி, ஏதோ சின்னதா இருக்கும். கொஞ்ச நேரத்துல சரியாகிடும், மதியத்துக்கு மேல வேலைக்குப் போயிடலாம்னு நினைச்சிக்கிட்டு இருந்தோம். ஆனா, அடுத்தடுத்து வந்த மெசேஜ்லாம் பார்த்தப்ப நெஞ்சு பதற ஆரம்பிச்சுடுச்சு. எங்களுக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. வேலை ஒரு பக்கம் இருந்தாலும்கூட எல்லோரோடும் சந்தோஷமா பேசி, சிரிச்சிட்டு இருந்த இடம். இன்னைக்கு கருகிக் கெடக்குது" என்று கண் கலங்கினார்.
அவரைத் தேடி வந்த சக பெண் ஊழியர், "நான் போன வருசம்தான் இங்க வேலைக்கு வந்தேன். பிரமாண்டமா பார்த்த கடை, இப்போ உருக்குலைஞ்சு கிடக்குது. டிவியில நியூஸைப் பார்த்துட்டு ஊருலேருந்து அம்மா, அப்பாலாம் போன் பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க பத்திரமா இருக்கோம்னு சொன்னப்பறம்தான் நிம்மதியானங்க. எங்க கூட வேலைப் பார்க்குறவங்க சில பேர், நம்மள வேலைய விட்டு அனுப்பிடுவாங்கன்னு பயமுறுத்துனாங்க. ஆனா, எங்களை வேற வேற ஊர்கள்ல இருக்குற கடைகளுக்கு மாத்தி விட்டுருக்காங்க" என்றார்.

No comments:
Post a Comment