Sunday, July 2, 2017


36 பேருக்கு எய்ட்ஸ்.. 200 கைதிகளுக்கு சிகிச்சை: பகீர் கிளப்பும் பரப்பன அக்ரஹாரா சிறை!

ராகினி ஆத்ம வெண்டி மு.

பெங்களூரூவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சமீபத்தில் நடந்து முடிந்த மருத்துவ பரிசோதனை பல அதிர்ச்சிகரத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.



பெங்களூரூவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில், விதிமுறைப்படி 2,300 கைதிகள் அடைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், சிறையில் தற்போது தண்டனைப் பெற்று வரும் கைதிகளின் எண்ணிக்கை 4,400. சிறையின் விதிமுறை மீறல் ஒருபுறமிருக்க, சமீபத்தில் சிறையில் உள்ள கைதிகளுக்காக மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. அந்த சோதனையின் முடிவுகளில் கைதிகளில் 36 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல கைதிகள் காச நோய், வலிப்பு நோய், இதய நோய், நுரையீரல் பிரச்னை, மன நோய் எனப் பலவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,400 கைதிகள் கொண்ட சிறைக்கு வெறும் மூன்று மருத்துவர்களே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மூன்று மருத்துவர்களும் நாள் ஒன்றுக்கு 200 கைதிகள் வரை மருத்துவ பரிசோதன செய்து சிகிச்சை அளித்து வருவதாகக் கூறுகின்றனர். ஆனால், கைதிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 11.01.2025