Thursday, August 3, 2017

கோவளம் - திருப்போரூர் சிற்றுந்து வசதி அவசியம்


பதிவு செய்த நாள் 02 ஆக
2017
22:21

கோவளம் : கோவளம் - திருப்போரூருக்கு சிற்றுந்து போக்குவரத்தை துவக்க வேண்டும் என, பகுதிவாசிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.திருப்போரூர் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலையில், கோவளம், திருவிடந்தை, வடநெம்மேலி, நெம்மேலி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.தாலுகா தலைமையிடமாக விளங்கும் திருப்போரூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள் உள்ளிட்டவற்றிக்கு, மேற்கண்ட பகுதிவாசிகள் வந்து செல்கின்றனர்.அதேபோல, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள, திருப்போரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலை பண்ணை, திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், கோவளம் கடற்கரை, முட்டுக்காடு படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர்.இவ்விரு பகுதிகளுக்கும் சென்று வருவதற்கு, இவ்விரு பகுதிவாசிகளுக்கும் முறையான போக்குவரத்து வசதி இல்லை. இதனால், ஆபத்தான முறையில், படிகளில் தொங்கியபடி, ஷேர் ஆட்டோக்களில் செல்லும் நிலை உள்ளது.இந்நிலையை போக்க, திருப்போரூர் - நெம்மேலி பாலத்தின் வழியாக, கோவளம் - திருப்போரூர் சிற்றுந்து வசதியை ஏற்படுத்த வேண்டும். இவ்வசதியை ஏற்படுத்தும் பட்சத்தில், கிராமவாசிகளும் பயன்பெறுவர். அரசுக்கும் நல்ல வருவாய் ஏற்படும்.சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் இப்பகுதியில் ஆய்வு செய்து, சிற்றுந்துகளை இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.

dinamalar

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024