Wednesday, August 9, 2017

வங்கி 'லாக்கர்' பாதுகாப்பு; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
பதிவு செய்த நாள்09ஆக
2017
08:11




புதுடில்லி : ''வாடிக்கையாளர்களின், 'லாக்கர்' பாதுகாப்பில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என, அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது,'' என, மத்திய கார்ப்பரேட் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் அருண் ஜெட்லி, ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: வங்கி லாக்கர்களில் இருந்து, களவு போகும் வாடிக்கையாளர்களின் பொருட்களுக்கு இழப்பீடு அளிப்பது தொடர்பான அறிக்கை எதையும், நிதிச் சேவைகள் துறை வெளியிடவில்லை. எனினும், 'லாக்கர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது, வங்கிகளின் பொறுப்பு; அதில் அலட்சியம் காட்டினால், வாடிக்கையாளர்களின் இழப்பீடு கோரிக்கைக்கு பதில் சொல்ல நேரும்' என, அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி அறிக்கை அனுப்பி உள்ளது.

லாக்கர் சேவை வழங்குவதில், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட, 20 வங்கிகள் கூட்டாக செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்த புகாரை, சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையம் பதிவு செய்து விசாரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024