Wednesday, August 9, 2017


ராமநாதபுரம் ,நெல்லை, தஞ்சை மாவட்டங்களில் மழை
பதிவு செய்த நாள்
ஆக 08,2017 21:22



ராமநாதபுரம்: ராமநாதபுரம், நெல்லை, தஞ்சை,கரூர் மாவட்டங்களில் மழை பெய்தது.

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, கோட்டைமேடு, பசும்பொன் அபிராமம், பேரையூர், ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.

நெல்லை மாவட்டத்தில் மழை:

நெல்லை மாவட்டத்தில் மூன்றடைப்பு , நாங்குநேரி பகுதிகளிலும் மழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில்கன மழை பெய்தது.

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது.
மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024