Wednesday, August 9, 2017

கன்னடம் தெரியாவிட்டால் வங்கியில் வேலையில்லை!
பதிவு செய்த நாள்08ஆக
2017
20:23


பெங்களூரு: 'கன்னட மொழி பேசாத வங்கி ஊழியர்கள், ஆறு மாதங்களுக்குள், கன்னட மொழியை கற்க வேண்டும்; இல்லாவிட்டால், பணியை இழக்க நேரிடும்' என, கன்னட மேம்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 'தேசிய, கிராமப்புற மற்றும் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும், கன்னட மொழி பேசாத ஊழியர்கள், ஆறு மாதங்களுக்குள், கன்னட மொழியை அடிப்படையில் இருந்து கற்க வேண்டும்' என, கர்நாடக அரசின் கீழ் இயங்கும், கன்னட மேம்பாட்டு ஆணையம், வங்கிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து, வங்கிகளின் மண்டல மேலாளர்களுக்கு, கன்னட மேம்பாட்டு ஆணைய தலைவர், எஸ்.ஜி.சித்தராமையா எழுதியுள்ள கடிதம்: வங்கிகளில் பணிபுரிவோர், கன்னட மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பல வங்கிகள், கன்னட மொழியில் பரிவர்த்தனை செய்ய ஆர்வம் காட்டவில்லை. மும்மொழி திட்ட அடிப்படையில், வங்கிகள் செயல்பட வேண்டும். வங்கி ஊழியர்கள், ஆறு மாதங்களுக்குள் கன்னட மொழியை கற்காவிட்டால், பணி நியமன விதிகளின் கீழ், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024