கடைகள், வீடுகளில் புகுந்த அரசு பஸ்
பதிவு செய்த நாள்10ஆக
2017
08:44
சென்னை : சென்னை பூவிருந்தவல்லி அருகே கரையான்சாவடி பகுதியில் அரசு பஸ், 2 கடைகள் மற்றும் வீடுகளில் புகுந்து விபத்து ஏற்பட்டது. தி.நகரில் இருந்து ஸ்ரீபெரும்புத்தூர் நோக்கி சென்ற தடம் எண் 544 கொண்ட பஸ் விபரத்திற்குள்ளானது.
விபத்தில் படுகாயம் அடைந்த ஐயப்பன் என்பவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவர் மற்றும் கன்டெக்டரிடம் பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment