Thursday, August 10, 2017


உயர் மருத்துவ படிப்பு 12ல் துவங்குது கவுன்சிலிங்

பதிவு செய்த நாள்09ஆக
2017
20:38


சென்னை: 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' எனப்படும், உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும், 12ம் தேதி துவங்குகிறது.

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும், உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ படிப்புகளான, டி.எம்., - எம்.சி.எச்.,க்கு, 1,215 இடங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில், 192 இடங்கள் உள்ளன. இதற்காக நடந்த, 'நீட்' தேர்வில், 6,709 பேர் தகுதி பெற்றுள்ளனர். மாநிலத்திற்கென இருந்த, 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அனைத்து இடங்களுக்கும், மத்திய அரசே, கவுன்சிலிங் நடத்துகிறது. 12ம் தேதி, ஆன்லைன் முறையில் துவங்கும் கவுன்சிலிங் குறித்த முழு அட்டவணை, பின்னர் அறிவிக்கப்படும் என, மத்திய அரசின், மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி தெரிவித்துள்ளது. மேலும், விபரங்களுக்கு, www.mcc.nic.in, http://mohfw.nic.in ஆகிய இணையதளங்களை தொடர்ந்து பார்வையிட, மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024