நீட் பிரச்சினையால் சித்தா, ஆயுர்வேதா படிக்க ஆர்வம் அதிகரிப்பு: 10 நாட்களில் 5,000 விண்ணப்பங்கள் விற்பனை
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதால் சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட 5 மற்ற படிப்புகளைப் படிக்க மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. 10 நாட்களில் 5,000 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு 6 அரசு கல்லூரிகளில் 390 இடங்கள் உள்ளன. அதே போல் தனியார் கல்லூரிகள் 22-ல் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 850 இடங்கள் உள்ளன.இந்நிலையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருந்து, ஓமியோபதி, பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ், பட்டப்படிப்புகளுக்கான 2017-18 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 2-ம் தேதியன்று தொடங்கியது.இதில் கடந்த 10 நாட்களில் 5,000 விண்ணபங்கள் விற்பனை ஆகின. வரும் 30-ம் தேதி முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறவுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வரும்31-ம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம், அறிஞர் அண்ணா அரசினர் மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம் சென்னை-600 016 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.ஆனாலும் இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறும்போது, அடுத்த ஆண்டு முதல் இந்தப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது என்றனர்.
No comments:
Post a Comment