சேமிப்பு கணக்கு வட்டியை இந்தியன் வங்கியும் குறைத்தது
பதிவு செய்த நாள்13ஆக
2017
08:21
புதுடில்லி : சமீபத்தில், பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்பு கணக்கிற்கான வட்டியை, 0.50 சதவீதம் குறைத்தது. இதன்படி, சேமிப்பு கணக்கில், 1 கோடி ரூபாய் வரை உள்ள இருப்பிற்கு, 3.5 சதவீத வட்டி; அதற்கு மேற்பட்ட தொகைக்கு, 4 சதவீத வட்டி தொடரும் என, தெரிவித்திருந்தது.இதை பின்பற்றி, இந்தியன் வங்கியும், சேமிப்பு கணக்கிற்கான வட்டியை குறைத்து உள்ளது.இது குறித்து, இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம், இரண்டு விதமான வகையில் வெளியிடப்பட்டு உள்ளது.இதன்படி, 50 லட்சம் ரூபாய் வரை உள்ள, சேமிப்பு கணக்கு இருப்பிற்கு, 3.5 சதவீத வட்டி வழங்கப்படும். மேலும், 50 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட இருப்பிற்கு, 4 சதவீத வட்டி விகிதம் தொடரும். இது, வரும், 16 முதல், அமலுக்கு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment