அ.தி.மு.க.,மாஜி அமைச்சர் நயினார் நாகேந்திரன்:அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.வில் இணைகிறார்
பதிவு செய்த நாள்13ஆக
2017
20:05
திருநெல்வேலி:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், சென்னைக்கு அமித்ஷா வரும்போதுபாரதிய ஜனதாவில் இணைகிறார்.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் நயினார் நாகேந்திரன்.நெல்லை தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். ஒரு முறை ஜெ.,அரசின்போக்குவரத்து துறை அமைச்சராக இருந்துள்ளார். 2016 சட்டசபை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு சொற்ப ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.அதன் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். ஜெ.,மறைவுக்கு பிறகு டி.டி.வி.,தினகரன்ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். இருப்பினும் அவர் சோபிக்கவில்லை. எனவே சமீபகாலமாக அ.தி.மு.க.,நிகழ்ச்சிகளிலோ அரசு விழாக்களிலோ பங்கேற்காமல் ஒதுங்கியிருக்கிறார்.தற்போது அவர் பாரதிய ஜனதாவில் இணைகிறார். வரும் 22ல் சென்னை வரும் பா.ஜ.,தேசிய தலைவர்அமித்ஷா முன்னிலையிலோ அல்லது காரைக்குடியில் நடக்கும் விழாவிலோ இணைகிறார்.இதுகுறித்து பா.ஜ.,மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாகபா.ஜ.க.,வை முன்னிலைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அமித்ஷாவின்வருகையின் நோக்கமும் அதுதான். தென் தமிழகத்தில் கட்சியில் தலித்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்நோக்கில் அந்த அமைப்பின் பிரமுகர்களை இணைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக சில தலித்கட்சி தலைவர்களிடம் பேசிவிட்டோம். ஒரு கட்சி தலைவர் தற்போதே எங்களுடன் இணைந்துவிட்டார்.
நீட் தேர்வு போன்ற நிலைப்பாடுகளில் எங்களின் குரலை ஒலித்துவருகிறார்.
இதே போல தென்மாவட்டங்களில் வேறு சமூகங்களை சேர்ந்த பிரமுகர்களை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். நயினார் நாகேந்திரனிடம் பேசிவிட்டோம். அவர் வெறுமனே வரக்கூடாது. 4 ஆயிரம்பேருடன் இணைய வேண்டும் என்பதுதான் கட்சியின் விருப்பமாகும். அவர் இணைந்ததும் மாநில அளவில் பொறுப்பு வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார். இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தரப்பில் பேச முயற்சித்த போது அவர் அலைபேசி "ஸ்விட்ச் ஆப் மோடி'லேயே இருக்கிறது. அமித்ஷா வின் சந்திப்பு பிறகு ஓங்கி ஒலிக்கும் போலிருக்கிறது.
No comments:
Post a Comment